தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பறக்கு புதிய எலக்ரிக் கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
14:31

மகான்செப்ட் ஒன் என்ற இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மோட்டார்களின் உந்து சக்தியுடன் சீறிப்பாயும் திறன் கொண்டது. இந்த எலக்ட்ரிக் சூப்பர் காரை குரோஷியாவை சேர்ந்த ரிமேக் ஆட்டோமொபைல் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. கடந்த ஆண்டு பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் விரைவில் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. தற்போது கான்செப்ட் நிலையை விட்டு மெல்ல உற்பத்தி நிலைக்கு மாறும் தருவாயில் இருக்கிறது.
இந்த சூப்பர் காரின் நான்கு சக்கரங்களிலும் உடனடி உந்து சக்தியை அள்ளித் தரும் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 4 எலக்ட்ரிக் மோட்டார்களும் சேர்ந்து அதிகபட்சம் 1088 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்சம் மணிக்கு 300கிமீ வேகம் வரை செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் 600 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. பிரேக் ஆற்றல் விரயமாவதை சேமிக்கும் தொழில்நுட்பமும் உண்டு. முழுவதும் இலகு எடை மற்றும் உறுதியான கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1950 கிலோ எடை கொண்டது. லித்தியம் அயான்-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் கார் கான்செப்ட் எதிர்கால சூப்பர் கார் தயாரிப்பு தொழில்நுட்பத்துக்கு முன்னோடியாக இருக்கும் என இதனை வடிவமைத்த ரிமேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 88 கார்கள் மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)