பதிவு செய்த நாள்
13 செப்2012
23:46
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதம், நாட்டின் ஏற்றுமதி 9.7 சதவீதம் சரிவடைந்து, 2,230 கோடி டாலராக (2,09,000 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மாதத்தில், இறக்குமதியும் 5.1 சதவீதம் குறைந்து,3,800 கோடி டாலராக (86,350 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இதனை அடுத்து,நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1,570 கோடி டால ராக (86,350 கோடி ரூபாய்) உள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந் துள்ள தால், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதம் சரிவடைந்துள்ளது.நடப்பு நிதி யாண்டின் முதல் ஐந்து மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 12,000 கோடி டாலராக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 1,280 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|