பதிவு செய்த நாள்
16 செப்2012
00:57

புதுடில்லி:வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்திய வங்கிகளில், மேற்கொள்ளும் டெபாசிட்டிற்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதனால், என்.ஆர்.ஐ.,கள், இந்திய வங்கிகளில் மேற்கொண்டுஉள்ள டெபாசிட், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், ஆறு மடங்கிற்கு மேல் அதிகரித்து, 738 கோடி டாலராக (40,590 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 125 கோடி டாலராக (6,875 கோடி ரூபாய்) இருந்தது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில், என்.ஆர்.இ.ஆர்.ஏ., கணக்கு, எப்.சி.என்.ஆர்.,(பீ) கணக்கு மற்றும் என்.ஆர்.ஓ., கணக்கு என, மூன்று வகையான டெபாசிட் திட்டங்களில், முதலீடு மேற்கொள்ளலாம்.இவற்றுள், என்.ஆர்.இ.ஆர்.ஏ., திட்டத்தில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கு, அதிக வட்டி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மேற்கண்ட திட்டத்தின் கீழ், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டிற்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
மேலும், இந்த கணக்கின் வாயிலாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மற்றும் இருப்பில் உள்ள தொகைக்கு வருமான வரி மற்றும் செல்வ வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், எப்.சி.என்.ஆர்.,(பீ) மற்றும் என்.ஆர்.ஓ., டெபாசிட்டுகளுக்கு வரி விலக்கு இல்லை.நடப்பாண்டு, ஜூலை மாதம் வரையிலுமாக, இந்திய வங்கிகளில் என்.ஆர்.ஐ.,கள் மேற்கொண்ட டெபாசிட், 6,245 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 5,333 கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|