பதிவு செய்த நாள்
16 செப்2012
14:54

தேனி:வாழைப்பழத்திற்கு கிராக்கி அதிகரித்துள்ளது. 60 கிலோ எடை கொண்ட வாழைத்தார், தோட்டத்திலேயே 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் வாழைக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் ஜனவரியில் யாரும் வாழை சாகுபடி செய்யவில்லை. தவிர கடலூர் போன்ற மாவட்டங்களில் தானே புயலால் வாழை சாகுபடி முற்றிலும் அழிந்து விட்டது.
இதனால், உள்நாட்டில் வாழைப்பழத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தேனி மாவட்டத்தில் இருந்து வாழைத்தார், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ஒரு தார் விலை 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களுக்கு வாழை கொண்டு செல்லப்படுகிறது. இங்கு விலையும் அதிகம் கிடைக்கிறது. தோட்டத்திலேயே 60 கிலோ எடை கொண்ட ஒரு தார் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மிகவும் சிறிய வாழைத்தார் கூட 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முருகன் கூறியதாவது: வாழைத்தாருக்கு, நவம்பர், டிசம்பரில் வெளிநாடுகளில் கிராக்கி ஏற்படும். அப்போது, உள்நாட்டில் விளைச்சல் அதிகரித்து தேவை குறைந்திருக்கும். எனவே, வெளிநாட்டிற்கு வாழை ஏற்றுமதி செய்யப்படும். இது போன்ற சாதகமான சூழ்நிலைகளால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழை சாகுபடி பரப்பும் அதிகரிக்கும், என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|