பதிவு செய்த நாள்
19 செப்2012
14:40
இந்தியாவில், விலை அதிகமான சூப்பர் பைக்குகள் என்பது ஒரு காலத்தில், கனவு போல தான் தோன்றியது. அந்த அளவுக்கு, இந்தியாவில், சூப்பர் பைக்குகள் விற்பனை அறவே கிடையாது. மிகவும் ஆர்வம் உள்ளவர்கள், வெளிநாடுகளில் இருந்து தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவர்களுக்கு, பைக்கின் உதிரி பாகங்கள் கிடைப்பதிலும், வாகனத்தை சர்வீஸ் செய்வதிலும், சிக்கல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், 2007ம் ஆண்டு இந்தியாவில், முதல் சூப்பர் பைக்குகளை, யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆர்1 மற்றும் எம்டி-01 என்ற பெயர்களில், இரண்டு சூப்பர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. வெளிநாட்டில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்பட்டதால், இந்த சொகுசு பைக்குகளின் விலை, ரூ.12.5 லட்சம் என்ற அளவில் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, சுசூகி, டூகாட்டி, ஹார்லி டேவிட்சன், ஹயோசாங், பி.எம்.டபிள்யூ., மோட்டராட், கவாஸாக்கி போன்ற நிறுவனங்களும், இந்தியாவில் சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்தின. தற்போது, 30 மாடல் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகிறது. முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட, யமஹாவின் ஆர்1 சூப்பர் பைக், அவ்வப்போது, மேம்படுத்தப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வந்தது. அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான, யமஹா ஆர்1 பைக், புதிய வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை தவிர, வேறு மாற்றம் பெரிய அளவில் இல்லை. யமஹா ஆர்1 பைக்கில்,998 சிசி ஷார்ட் ஸ்ட்ரோக், இன்-லைன் ஃபோர் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|