மின் தடை அதிகரிப்பால் தொழிற்சாலைகள் முடக்கம்மின் தடை அதிகரிப்பால் தொழிற்சாலைகள் முடக்கம் ... அமெரிக்க கோடீஸ்வரர்களில் பில்கேட்ஸ் முதலிடம் அமெரிக்க கோடீஸ்வரர்களில் பில்கேட்ஸ் முதலிடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
காந்தமாய் கவரும் ஹீரோவின் க்ளாமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2012
15:12

ஹீரோ நிறுவனத்தின் புதிய வரவான க்ளாமர் மோட்டார்பைக் பெயருக்கேற்ப கவர்ச்சியான, வித்தியாசமான, வளைவு நெளிவுகள் கொண்ட வடிவமைப்புடன் பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது. மைலேஜ், சொகுசு மற்றும் அதிக செயல்திறன் ஒருங்கே அமைந்த ஹீரோவின் க்ளாமர் இன்றைய இளைஞர்களை வெகுவாகவே ஈர்க்கிறது என்றால் மிகையல்ல.
இதன் கவர்ச்சியான வடிவமைப்பிற்கு காரணமாய் இருப்பவை இதன் ஏரோடைனமிக் டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவிங் ஆர்ம் உடன் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வர், புது வித ட்ரப்பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப்ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் காம்போ மீட்டர் கொண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட் புதுவித வடிவமைப்பில் உள்ளதும் ஆகும்.
க்ளாமரின் சிறப்பான செயல்திறனுக்கான காரணங்களாக அமைந்துள்ளவை அதன் ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோக் சிங்கள் சிலிண்டர் OHC என்ஜின் ஆகும். 124.7சிசி திறன் கொண்ட இந்த மோட்டார் பைக் 7000 ஆர்பிஎம்மிற்கு 6.72 கிலோ வாட் (9பிஎச்பி) பவரும் 4000 ஆர்பிஎம்மிற்கு 10.35என்எம் டார்க்கும் கொடுக்கிறது. இதில் 4 ஸ்பீட் மெஷ் டைப் கியர் பாக்சும், மல்டிப்ளேட் வெட் க்ளட்ச்சும் உள்ளது.
ஹீரோவின் க்ளாமர் இரண்டு வேரியன்ட்டில் வருகிறது. ஸ்டான்டர்ட்டான ஹீரோ ஹோண்டா க்ளாமர் என்றும் க்ளாமர் FI என்றும், இதில் FI என்ற ஹை என்ட் மாடலில் PGMFI டெக்னாலஜி உள்ளதால் இதன் ஃப்யூவல் சிஸ்டம் புரோகிராம்ட்டு ஃப்யூவல்இன்ஜக்ஷன் முறையை கொண்டுள்ளது. இதனால் அதிக என்ஜின் செயல்திறனும் அதிக பவரும், எரிபொருள் சிக்கனமும் மாசு கட்டுப்பாடும் ஒருங்கே கிடைக்கிறது.
க்ளாமர் FI மாடலில் மால்ஃபன்க்ஷன் பாயின்ட்டர் லாம்ப்பும் பான்க் ஆங்கிள் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பைக்கில் பிரேக் டவுன் பிரச்சனையோ, டிப்ஸ் ஓவர் பிரச்சனையோ ஏற்பட்டால் இச்சென்சார் சிக்னலை பாயின்டருக்கு அனுப்பி விடும் அதுமட்டுமின்றி இக்னீஷன் மற்றும் பெட்ரோல் சப்ளையையும் உடனே நிறுத்தி விடும். இது மட்டுமின்றி இதன் ரியல் டைம் மைலேஜ் இன்டிகேட்டர் 10 நொடிக்கான தோராய மைலேஜையும் ஸ்பீட் சென்சார் மற்றும் ECUவின் டேட்டா மூலம் பெற்று டிஸ்ப்ளேயில் காட்டிவிடுகிறது.
ஹீரோ நிறுவனத்தின் சிறப்பான, விற்பனைக்கு பின் உள்ள சர்வீசும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். 18 மாதத்திற்குள் 6 இலவச சர்வீஸ் அளிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி ப்ரேக் த்ரூ சர்வீஸ் வாரண்டி பாக்கேஜாக 3 வருடமும் 40000 கிலோமீட்டர் என்றும் வழங்கப்படுகிறது.
இதில் AMI என்ற அட்வான்ஸ்டு மைக்ரோ ப்ராசசர் இக்னீஷன் சிஸ்டம் உள்ளது. கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் இரண்டும் கொண்டுள்ளது. க்ளாமரில் முன்புற டெலஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வரும் பின்புற ஹைட்ராலிக் ஜாக் அப்சர்வர் பொருத்தப்பட்டு சிறந்த சஸ்பென்ஷனை கொடுக்கிறது. இதன் ஹை என்ட் மாடலில் பின்புற சஸ்பென்ஷனை ஐந்து விதமான பாதைகளுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,மிகவும் சிறப்பான அம்சமாகும்.
நல்ல பெரிய கம்பீர டாங்க் கொண்டுள்ள க்ளாமர் மெட்டாலிக் ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட், மெட்டாலிக் க்ரே, வைப்ரன்ட் ஆரஞ்சு மற்றும் கேண்டி ரெட் என்று ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதன் ரியர் வ்யூ மிர்ரரும், ரியர் சஸ்பென்ஷன் ரிங்கும் பைக்கின் நிறதிலே இருப்பது இந்த பைக்கின் தோற்றத்தை ஸ்போட்டியாக மாற்றுகிறது.
மொத்தத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட என்ஜின் தொழில்நுட்பம் (PGMFI), நல்ல பிக்அப்(7.3நொடியில் 0.60கி.மீ. மணிக்கு என்ற வேகம்), சிறந்த மைலேஜ் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஹீரோவின் க்ளாமர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்கிறது. மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹீரோ டீலர்களை அணுகவும்.
ஏரோடைனமிக் டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவிங் ஆர்ம் உடன் கூடிய ஹைட்ராலிக் சாக் அப்சர்ஸ், புதுவித ட்ரப்பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப்ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் கோம்போ மீட்டர் கொண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட்

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)