பதிவு செய்த நாள்
26 செப்2012
12:05
மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் மிகவும் விலை அதிகமானது, கிஷாஷி கார். இந்த கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதியாகி, அதன் பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, 105 சதவீத சுங்க வரிக்கு ஆட்படுகிறது. இப்பிரச்னையால், இந்த காரின் விலை ரூ.17 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்த கார், 2011ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், இந்த காரின் விற்பனை, 85 சதவீதம் குறைந்து, வெறும், 23 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 157 கார்கள் விற்பனையாகி இருந்தன.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தபோதிலும், விலை அதிகம் என்பது, இந்த காருக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டது. இப்பிரச்னையை போக்க, மாருதி சுசூகி நிறுவனம், தற்போது, இந்த காருக்கு, ரூ.3 லட்சம் அளவுக்கு, தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது. இதற்கு முன், டீலர்கள் தரப்பில் தான், இதுபோன்ற சலுகை அளிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக, மாருதி சுசூகி நிறுவனமே, தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த காரில், 2.4 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சி.வி.டி., ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், என இரண்டு வகைகளிலும், இந்த கார் கிடைக்கிறது. இந்த காரின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் திட்டமும், மாருதி சுசூகியிடம் உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|