தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... மானிய சுமையால் ஓ.என்.ஜி.சி., விரிவாக்க பணிகள் பாதிப்பு மானிய சுமையால் ஓ.என்.ஜி.சி., விரிவாக்க பணிகள் பாதிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உற்பத்தி செலவை குறைக்க டி.வி.எஸ்., புது திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2012
16:11

இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில், முன்னணியில் இருப்பது, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம். ஆனால், கடந்த சில மாதங்களாக, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின், டூவீலர் விற்பனையில் தொய்வு காணப்படுகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள, பொருளாதார தொய்வு நிலை, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்கு காரணமாக உள்ளது.
இப்பிரச்னையை சமாளிக்க, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், இரண்டு யுத்திகளை கையாள உள்ளது. முதலில், பிளாட்பாரம் எண்ணிக்கையை குறைப்பது. புதிதாக ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கான பிளாட்பாரத்தை முதலில் அமைக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து தான், வாகனங்கள் உருவாகும். ஒரு மாடல் பைக்குக்கு, ஒரு பிளாட்பாரம் என்பது கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே, ஒரே பிளாட்பாரம் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை உருவாக்குவது, சிக்கனமான நடைமுறை. இந்த நடைமுறை, கார் நிறுவனங்களிடம் உண்டு. ஹுண்டாய் நிறுவனத்தின், இன்டிகா, இண்டிகோ, மாருதி சுசூகியின், ஸ்விஃப்ட், ஸ்விஃப்ட் டிசையர் உள்ளிட்ட பல உதாரணங்களை கூறலாம்.

ஆனால், இந்த நடைமுறை, இருசக்கர வாகன உற்பத்தியில், இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அதை தான், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவவனம் பயன்படுத்த உள்ளது. முதல் கட்டமாக, விரைவில் அறிமுகமாக உள்ள, "பீனிக்ஸ் 125' பைக், இந்த நடைமுறையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக், ஏற்கனவே விற்பனையில் உள்ள, "ஸ்டார் சிட்டி' பைக்கின் உதிரிபாகங்களை கொண்டது. வரும் காலத்தில், ஒரே பிளாட்பாரத்தில், பல மாடல் பைக்குகளை, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த யுத்தி, சீன உதிரி பாகங்களை பயன்படுத்துவது என்பது தான். பொதுவாக, சீன தயாரிப்பு என்றாலே, தரம் இருக்காது என்ற கருத்து உண்டு. ஆனால், உயர்தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் பொருட்களுக்கு இப்பிரச்னை இல்லை. உதாரணத்துக்கு, ஆப்பிள் நிறுவனம் தனது, ஐஃபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு, சீன உதிரிபாகங்களை தான் பயன்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து, முழு தர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, சீன உதிரிபாகங்களை பயன்படுத்துவது என டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், உதிரிபாகங்களின் செலவு குறையும் என்பது, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் கருத்தாக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)