கைவினை பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,733 கோடிகைவினை பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,733 கோடி ... சகாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி வழங்க ஒப்புதல் சகாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி வழங்க ஒப்புதல் ...
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.1 சதவீதமாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
00:37

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 2.1 சதவீதமாக, குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே ஆகஸ்ட் மாதத்தில், 3.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும், நடப்பாண்டு, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, (1.8 சதவீதம்) ஆகஸ்ட் மாதத்தில், இதன் உற்பத்தி வளர்ச்சி சற்று உயர்ந்துள்ளது.பின்னடைவு:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், சிமென்ட் ஆகிய நான்கு துறைகளின் உற்பத்தி பின்னடைவை கண்டதால், ஒட்டுமொத்த எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், மேற்கண்ட எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 5.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.இயற்கை எரிவாயு:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ், 13.5 சதவீதமாக மிகவும் பின்னடைவை கண்டுள்ளது.
இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், மைனஸ் 5.3 சதவீதமாக இருந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மைனஸ் 0.6 சதவீதமாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.6 சதவீதமாக இருந்தது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், உர துறையின் உற்பத்தி, மைனஸ் 2.1 சதவீதமாகவும், சிமென்ட் துறையின் உற்பத்தி, மைனஸ் 2.4 சதவீதமாகவும் இருந்தது.
அதேசமயம், கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கண்ட துறைகளின் உற்பத்தி, 4.3 சதவீதம் மற்றும் 8.4 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.
உருக்கு துறை:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.9 சதவீதமாக இருந்தது.
இதேபோன்று, மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 9.4 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஒரு சில துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்தும், பின்னடைவையும் கண்டுள்ள நிலையில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 11 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 15.2 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைந்திருந்தது.
பங்களிப்பு:தொழில் துறை குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின், பங்களிப்பு, 37.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.நடப்பு 2012ம் ஆண்டு, மே, ஜூன், ஜூலை மாதங்களில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 4 சதவீதம், 3.6 சதவீதம் மற்றும் 1.8 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 5.9 சதவீதம், 5.6 சதவீதம் மற்றும் 8.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது என, தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)