தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.2,750 கோடி சரிவு நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.2,750 கோடி சரிவு ...
பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமியம் 13.8 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2012
00:23

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின், பிரிமியம் வருவாய், கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 13.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனங்கள் திரட்டிய பிரிமியம் வருவாய், 5,779.57 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,),தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாதங்களில், இந்நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 17.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 27,942 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களுள், எஸ்.பீ.ஐ. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், இதே காலத்தில், 216 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த வருவாய், 105 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், இதே காலத்தில், 42.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், தனியார் துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 18.3 சதவீதம் உயர்ந்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த, நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், பொதுத் துறையை சேர்ந்த அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 3.9 சதவீதம் குறைந்துள்ளது என, ஐ.ஆர்.டீ.ஏ., தெரிவித்துள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)