ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜாஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா ... பொது துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் நவம்பரில் ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட திட்டம் பொது துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் நவம்பரில் ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட ... ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
சோனியின் ஆண்ட்ராய்ட் 4 எக்ஸ்பீரியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
16:16

எக்ஸ்பீரியா வரிசையில் ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச், சிஸ்டத்தில் இயங்கும் இரு மொபைல் போன்களை சோனி நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றில் இரண்டாவது மாடல் இருசிம் இயக்க போனாகும். இவை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.10,500 என விலையிடப்பட்டுள்ளன.

எக்ஸ்பீரியா டிபோ மற்றும் எக்ஸ்பீரியா டிபோ டூயல் என இவை பெயரிடப் பட்டுள்ளன. இவற்றின் சி.பி.யு. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகின்றன. 3.2 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்பி. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இவை இரண்டும் 3ஜி போன்களாகும். 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட 3.2 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. 480 பி வீடியோ இயக்கம் கிடைக்கிறது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 3ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்தும் வசதி, அக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், 5 மணி நேரம் பேசும் வசதி, 470 மணி நேரம் தங்கும் திறன், 36 மணி நேரம் பாட்டு, 3 மணி நேரம் வீடியோ இயக்க மின்சக்தி தரும் பேட்டரி ஆகியவை இந்த இரண்டு போன்களிலும் கிடைக்கின்றன. இவற்றின் பரிமாணம் 3.4 x 2.2 x 0.4 (13 மிமீ) அங்குலம். எடை 100 கிராம்.

போனுடன் ஸ்கிரீன் பாதுகாப்பு பட்டை, மைக்ரோ யு.எஸ்.பி.கேபிள், மைக்ரோ சிம் அடாப்டர் ஆகியவையும் கிடைக்கின்றன. கருப்பு, நேவி புளு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இவை வந்துள்ளன. இரண்டு சிம் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டும் கிடைக்கிறது. சில இணைய தளங்களில், இந்த இரண்டு போன்களும் சற்று விலை குறைவாகக் கிடைக்கின்றன. சில மொபைல் போன் சேவை நிறுவனங்களிடம் வாங்கும்போது, போன் பயன் படுத்துவதிலும் சலுகைகள் தரப்படுகின்றன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)