பதிவு செய்த நாள்
05 அக்2012
01:18

மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தியதை அடுத்து, அதன் பயன்பாட்டு வளர்ச்சி குறைந் துள்ளதாக, பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு பிரிவின்(பி.பி.ஏ.சி.,) அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு:கடந்த ஓராண்டிற்கும் மேலாக டீசல் விலை உயர்த்தப்படாததால், பல தொழிற் சாலை கள், விலை அதிகமுள்ள உலைக்கலன் எண்ணெய்க்கு பதிலாக, அதை விட, விலை குறைந்த டீசலை பெருமளவில் பயன்படுத்த துவங்கின.இந்நிலையில், மத்திய அரசு, சென்ற செப்டம்பர் 13ம் தேதி, டீசல் விலையை, லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தியது.இதையடுத்து, தொழிற்சாலைகளின் டீசல் செலவினம் அதிகரித்துள்ளது. இதை குறைக்கும் நோக்குடன், மீண்டும் உலைக்கலன் எண்ணெயை, தொழிற்சாலைகள் பயன்படுத்த துவங்கியுள்ளன.
இதனால், டீசல் பயன்பாட்டு வளர்ச்சி, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. சென்ற செப்டம் பர் நிலவரப்படி, நாட்டின் டீசல் பயன்பாடு, 5 சதவீதம் என்ற அளவில், மிக குறைந்த வளர்ச்சியை கண்டுள்ளது. அதே சமயம், சென்ற 2011ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், டீசல் பயன்பாடு 9.8 சதவீதம் என்ற அளவில், அதிக வளர்ச்சியை கண்டிருந்தது.
மழை பொழிவு:டீசல் விலை உயர்வால் மட்டுமே, அதன் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாக வும் கூற முடியாது. சென்ற மாதம், நாட்டின் பல பகுதிகளில் போதிய அளவிற்கு மழை பொழிவு இருந்தது. அதன் விளைவாக, பல மாநிலங்களில், மின் பற்றாக்குறையின் அளவு குறைந்துள்ளது. இதுவும், டீசல் பயன்பாடு குறைய வழி வகுத்துள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அடக்க விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்கின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த இழப்பில், டீசலின் பங்களிப்பு மட்டும், 60 சதவீதமாக உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியது.
சர்வதேசவிலை:இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் கேற்ப, இரு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
அதே சமயம், டீசல் விலை மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு நீடிப்பதால், அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாத நிலை உள்ளது.கடந்த 14 மாதங் களுக்குப் பிறகு, சென்ற செப்டம்பரில் தான் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
வாகன விற்பனை:பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட போது,ஒரு லிட்டர் பெட் ரோல் விலை, டீசல் விலையை விட, 26 சதவீதம் அதிகமாக இருந்தது.இதனால், நாட்டில், டீசல் வாகனங்களின் விற்பனை அதிகரித்து, பெட்ரோல் வாகனங்களின் விற்பனை குறைந்து வருகிறது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த வாகன விற்பனையில், பெட்ரோல் வாகனங்களின் பங்களிப்பு, 53 சதவீதமாக குறைந்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டில், 72 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், டீசல் வாகனங்களின் விற்பனை, 28 சதவீதத்தில் இருந்து, 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், டீசல் பயன்பாடு, ஐந்து மாதங்களில், இரட்டை இலக்க வளர்ச்சியும், நான்கு மாதங்களில், ஒற்றை இலக்க வளர்ச்சியும் கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 11.65 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பெட்ரோலில் 1.60 ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.38 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், டீசலின் பங்களிப்பு 81,192 கோடி ரூபாயாக உள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|