பதிவு செய்த நாள்
05 அக்2012
10:48

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.96 புள்ளிகள் அதிகரித்து 19086.11 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.35 புள்ளிகள் அதிகரித்து 5793.05 புள்ளிகளோடு காணப் பட்டது. ஜப்பான், ஹாங்காங், ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் நன்கு இருந்தது. மத்திய அரசு, மேலும் பல பொருளாதார சீர்திருந்த அறிவிப்புகளை வெளியிடும் என்ற நிலைப்பாட்டால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடுகளை விஞ்சி, அமெரிக்காவில், வேலை வாய்ப்பு மற்றும் சேவை துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன என்ற அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|