பதிவு செய்த நாள்
06 அக்2012
11:24
டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் இன்னேவா கார், எம்.பி.வி., கார் பிரிவு விற்பனையில் முன்னணியில் உள்ளது. இதன் விற்பனையை அதிகரிக்க, சிறப்பு அம்சங்கள் கொண்ட, லிமிடெட் எடிசன் மாடல் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில், தற்போது, இன்னோவா ஏரோ என்ற பெயரில், லிமிடெட் எடிசன் மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில், டிசம்பர் மாதம் வரை, 1,200 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இரண்டு வண்ணங்களில், இந்த கார் கிடைக்கும். ஏழு இருக்கைகள் மற்றும் எட்டு இருக்கைகள் என இரண்டு வகைகளிலும், மாசு கட்டுப்பாட்டு விதியான பாரத் ஸ்டேஜ் 3 மற்றும் பாரத் ஸ்டேஜ் 4 என இரண்டு பிரிவுகளிலும், இந்த கார் கிடைக்கும். இந்த காரின் விலை, டில்லியில், ரூ.12.25 லட்சத்தில் துவங்கி, ரூ.12.30 லட்சம் வரை உள்ளது. எனினும், தமிழகத்தில் மாறுபடும். டீலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|