பதிவு செய்த நாள்
08 அக்2012
00:17

கோல்கட்டா:வரும், 2014ம் ஆண்டில், இந்தியா - ஜப்பான் இடையிலான பரஸ்பர வர்த்தக இலக்கு, 2,500 கோடி டாலராக (1.37 லட்சம் கோடி ரூபாய்) நிர்ணயிக்கப் பட்டு உள்ளது என, ஜப்பான் தூதரக அதிகாரி மிட்சோ கவாகுசி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியா - ஜப்பான் இடையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
இவ்விரு நாடுகளுக்கு இடையில், தாதுப் பொருட்கள், நவரத்தினங்கள், இரும்புத் தாது, உருக்கு, கடல் உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்ற, 2010 - 11ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 1,400 கோடி டாலர் (77 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. இதில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 500 கோடி டாலராகும்.இந்நிலையில், வரும் 2014ம் ஆண்டில், இந்தியா - ஜப்பான் இடையிலான பரஸ்பர வர்த்தக இலக்கு, 2,500 கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டில், ஜப்பானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.இவ்வாறு மிட்சோ கவாகுசி கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|