பதிவு செய்த நாள்
08 அக்2012
13:40

சென்ற செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் விற்பனைக் கடைகளில், பட்ஜெட் விலையில் விற்பனையாகிறது சாம்சங் சி 3262 நியோ மொபைல் போன். இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனின் திரை 2.4 அங்குல அகலத்தில் தொடு டி.எப்.டி. தொடுதிரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது. இதன் பரிமாணம் 96.9x54.3x13.5 மிமீ. எடை 82 கிராம். பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டு, செராமிக் வெள்ளை மற்றும் நீலம் கலந்த கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 20 எம்பி உள் நினைவகம், A2DP இணைந்த புளுடூத் ஆகிய வசதிகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் கிடைக்கிறது. எட்ஜ் தரப்படவில்லை. வீடியோவுடன் கூடிய கேமரா உள்ளது. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள், ஆர்கனைசர், இணைய பிரவுசர், இமெயில், எம்.எம்.எஸ்., புஷ் இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. 1000 mAh திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 14 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இதன் ரேடியோ அலைக் கதிர் வீச்சு 0.76 W/kg ஆக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,250.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|