பதிவு செய்த நாள்
09 அக்2012
04:21
ஐதராபாத்:நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், நடுத்தர வகையைச் சேர்ந்த, "டேப்லெட் கம்ப்யூட்டர்' விலை, சராசரியாக, 26 ஆயிரம் ரூபாயிலிருந்து, 13 ஆயிரம் ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, "டேப்லெட்' விற்பனை 5.50 லட்சமாக அதிகரித்துள்ளது என, சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.குறைந்த விலை கொண்ட டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கு, சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.
இதன் விளைவாக, பல்வேறு நிறுவனங்கள், 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் விலையில் "டேப்லெட்'களை அறிமுகம் செய்து வருகின்றன.இதையடுத்து, மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த "டேப்லெட்' விற்பனையில், புதிய தயாரிப்புகளின் பங்களிப்பு 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், உள்நாட்டில், "டேப்லெட்' விற்பனையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 18.4 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, சாம்சங் (13.3 சதவீதம்), ஆப்பிள் (12.3 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|