பதிவு செய்த நாள்
09 அக்2012
16:09
டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுகம் செய்தார். இந்த நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள்ள அவந்தி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் அவந்தி சூப்பர் கார், முதல் 4 மாதங்களில் 300 கார்களை விற்பனை செய்ய டிசி திட்டமிட்டுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2,000 அவந்தி சூப்பர் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக டிசி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 மாதத்தில் நாடு முழுவதும் 16 புதிய டீலர்களை திறக்க இருக்கிறது டிசி நிறுவனம். கார் கஸ்டமைசேஷன் செய்யும் பணிகளோடு, அவந்தி காரின் விற்பனையும் இந்த ஷோரூம்கள் வழியாக மேற்கொள்ளப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|