பதிவு செய்த நாள்
11 அக்2012
01:20

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற் கொண்ட முதலீடு, 136 கோடி டாலராக (7,480 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், மேற்கொள்ளப்பட்டதை விட, (195 கோடி டாலர்/10,725 கோடி ரூபாய்) 30 சதவீதம் குறைவு என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், இந்திய நிறுவனங்கள், 406 ஒப்பந்தங்கள் வாயிலாக, அயல்நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இதில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான பார்தி ஏர்டெல், ஜே.கே.சிமென்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன. தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்வதற்காக, 15 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.
ஜே.கே.சிமென்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த, அதன் துணை நிறுவனத்தில், 10.40 கோடி டாலரையும், டிராக்டர் அண்டு பார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், அதன் அமெரிக்க துணை நிறுவனத்தில், 6.50 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம், சைப்ரஸ் நாட்டை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், 5.89 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. நவ பாரத் வென்சர்ஸ் நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அதன் துணை நிறுவனத்தில், 5 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|