பதிவு செய்த நாள்
11 அக்2012
01:21

புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டில், நாட்டின், சாக்லெட் துறையின் சந்தை மதிப்பு, 7,500 கோடி ரூபாயை தாண்டும் என, "அசோசெம்' மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில், சாக்லெட் பயன்பாடு ஆண்டுதோறும், 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, நகரங்களில் வசிக்கும், 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சாக்லெட் பயன்படுத்துகின்றனர். புறநகர் பகுதிகளிலும், இதன் பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், நகரங்களில், சாக்லெட் பயன்பாடு, 35 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய இனிப்பு வகைகளுக்கு பதிலாக, பெரும்பாலோர் சாக்லெட் பயன்படுத்துவதே இதற்கு காரணமாகும்.மேலும், மக்களின் வருமானம் அதிகரிப்பு, கண்கவர் வண்ணங்களில் சாக்லெட்களை சிப்பமிடுதல், நியாயமான விலை உள்ளிட்டவற்றால், சாக்லெட் பயன்பாடு உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, வரும், 2015ம் ஆண்டில், நாட்டின், சாக்லெட் துறையின் சந்தை மதிப்பு, 7,500 கோடி ரூபாயை தாண்டும் என, அசோசெம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|