பதிவு செய்த நாள்
11 அக்2012
01:24

ஈரோடு:கடந்த மாதம் ஏறுமுகத்தில் இருந்த மஞ்சள் விலை, தற்போது மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த, ஐந்து நாட்களில் மஞ்சள் குவிண்டாலுக்கு,635 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. விலை உயர்வை எதிர் பார்த்து விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைக்க துவங்கி உள்ளனர்.
தர்மபுரி:தமிழகத்தில், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், 88 சதவீதம் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஈரோடு மாவட்டம், மஞ்சள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதலிடம் வகிக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் மஞ்சள், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் வியாபாரிகளால், கொள்முதல் செய்யப்படும் மஞ்சள், தரம்பிரிக்கப்பட்டு, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வந்தது.
அரசு, "டான்பெட்' மூலம் கொள்முதல் செய்யத் துவங்கியதை அடுத்து, வெளிச் சந்தையில் மஞ்சள் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஆகஸ்ட் இறுதியில், ஒரு குவிண்டால், 7,189 ரூபாய் வரை சென்றது.இந்நிலையில், திடீரென மஞ்சள் விலை குறைந்து வருகிறது. இதனால், மண்டிகளில், மஞ்சள் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. நாள்தோறும், சராசரி, 1,000 மூட்டைகளுக்கு மேல் வந்த மஞ்சள், தற்போது, 350 மூட்டைகளாக குறைந்து விட்டது.
கடந்த 3ம் தேதி, 6,066 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், 635 ரூபாய் குறைந்து, 5,431 ரூபாய்க்கும், குவிண்டால் கிழங்கு மஞ்சள் அதிகபட்சம், 5,326 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.தீபாவளி பண்டிகை நெருங்க, நெருங்க விலையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைக்கத் துவங்கி உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|