பதிவு செய்த நாள்
11 அக்2012
01:26

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், நாட்டின் மோட்டார் வாகன விற்பனை, கடந்த ஆண்டின், இதே மாதத்தை விட, 9.43 சதவீதம் சரிவடைந்து, 14.18 லட்சமாக குறைந்துள்ளது.
எரிபொருள்:இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 15.66 லட்சமாக இருந்தது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் (எஸ்.ஐ. ஏ.எம்.,) தெரிவித்துள்ளது.பொருளாதார சுணக்க நிலை, எரி பொருள் விலை உயர்வு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது போன்றவற்றால், ஒட்டுமொத்த அளவில், வாகன விற்பனை குறைந்துள்ளது.
குறிப்பாக, சென்ற செப்டம்பர் மாதத்தில்,மோட்டார் சைக்கிள் விற்பனை,18.9 சதவீதம் வீழ்ச்சி கண்டு,7.54 லட்சமாக சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், கார் விற்பனை, 5.36 சதவீதம் குறைந்து, 1.66 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.56 லட்சமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, 12.92 சதவீதம் சரிவடைந்து, 12.28 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 10.69 லட்சமாக குறைந்துள்ளது.அதே சமயம், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை,0.62சதவீதம் உயர்ந்து,49,271லிருந்து,49,576 ஆக அதிகரித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை, 4.88 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.19 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 2.29 லட்சமாகவும், வர்த்தக வாகன விற்பனை, 0.04 சதவீதம் உயர்ந்து, 70,658 என்ற எண்ணிக்கையிலிருந்து, 70,683 ஆகவும் உயர்ந்து உள்ளது.உற்பத்திசென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின், மொத்த வாகன உற்பத்தி, 7.91 சதவீதம் சரிவடைந்து, 17.73 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 16.73 லட்சமாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வாகன ஏற்றுமதி, 5.66 சதவீதம் குறைந்து, 26.15 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்து, 24.08 லட்சமாக குறைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|