பதிவு செய்த நாள்
11 அக்2012
10:40

சென்னை: சமையல் காஸ் சிலிண்டர், புதிய இணைப்பிற்கான, "டெபாசிட்' தொகையில், 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாதம், 6ம் தேதி, மானிய விலையில் வழங்கப்படும், 14.2 கி.கி., சமையல் காஸ் சிலிண்டர் விலையில், 11.42 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது காஸ் சிலிண்டருக்கான புதிய இணைப்பு பெறும்போது, செலுத்த வேண்டிய, டெபாசிட் தொகையை, 200 ரூபாயை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்படி, இனி, புதிய காஸ் இணைப்பிற்கான, டெபாசிட் தொகையாக, நுகர்வோர், 1,450 ரூபாய் செலுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை தவிர, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும். பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், சிலிண்டர் விற்பனை, ஏஜென்சிகளில், நேற்று முன்தினம் முதல், அமலுக்கு வந்துள்ள இக்கட்டண உயர்வு, ஏற்கனவே விண்ணப்பித்து, புதிய காஸ் இணைப்பிற்காக காத்திருப்போருக்கும் பொருத்தும் என, ஐ.ஓ.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|