பதிவு செய்த நாள்
11 அக்2012
15:59

டொயோட்டா தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 8700 கார்களை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆல்டிஸ் மற்றும் கேம்ரி கார்களின் பவர் விண்டோ மாஸ்டர் பட்டனில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக டொயோட்டாவுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கரொல்லா ஆல்டிஸ் கார்களையும், 2006ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி முதல் 2008ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கேம்ரி கார்களையும் திரும்ப பெறுவதற்கு டொயோட்டா முடிவு செய்துள்ளது. மொத்தம் 8,700 கார்களை டொயோட்டா திரும்ப பெற உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், தொழில்நுட்பக் கோளாறை இலவசமாக சரிசெய்து தரப்பட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அடுத்த மாதம் முதல் திரும்ப பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக டொயோட்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|