பதிவு செய்த நாள்
14 அக்2012
00:31
மும்பை: நடப்பு 2012ம் ஆண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, 8.75 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8.3 சதவீதம் குறைவு என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனம், 'விண்டோஸ் 8' இயக்கத் தொகுப்பை, நடப்பு நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இதையடுத்து, பல நிறுவனங்கள், புதிய கம்ப்யூட்டர் வாங்குவதை ஒத்திப் போட்டுள்ளன. இதன் விளைவாக, சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை குறைந்து உள்ளது. சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனையில், முதல்முறையாக, லெனோவா நிறுவனம், 15.7 சதவீதச சந்தை பங்களிப்புடன், முதலிடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, எச்.பி., நிறுவனம், 15.5 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|