தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ...  ரசாயன ஆய்வு துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் ரசாயன ஆய்வு துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஸ்பெலண்டர் விற்பனையை முந்தியது டிஸ்கவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
14:41

இந்தியாவில்,"என்ட்ரி லெவல் பைக்' எனப்படும், 100 சிசி பைக் பிரிவில், பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பெலண்டர் பைக் தான். தற்போது இந்த பைக், "ஸ்பெலண்டர், ஸ்பெலண்டர் பிளஸ், ஸ்பெலண்டர் ப்ரோ' என மூன்று மாடல்களில் வெளி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஸ்பெலண்டர் பைக் விற்பனையை, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் முந்தியதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் (மோட்டார் சைக்கிள் வர்த்தகம்) கே.சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: செப்டம்பர் மாத விற்பனையை பொறுத்தவரை, உலகளவில், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து 968 டிஸ்கவர் பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இது, உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியை உள்ளடக்கியது. அதே நேரத்தில், இந்த மாதத்தில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து,18 ஸ்பெலண்டர் பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளன. கடந்த, 2004ம் ஆண்டு, டிஸ்கவர் பைக்கை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். தற்போது, இதில், நான்கு மாடல் பைக்குகள் விற்பனையாகின்றன. சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட," டிஸ்கவர் 125 எஸ்டி' என்ற பைக், செப்டம்பர் மாதத்தில், 35,000 பைக்குகள் விற்பனை என்ற சாதனையை புரிந்துள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன், ஸ்பெலண்டர் பைக்குக்கு போட்டியாக தான், டிஸ்கவர் பைக்கை அறிமுகப்படுத்தினோம். தற்போது, அந்த பைக் விற்பனயை மீறி சாதித்துள்ளளோம். தொடர்ந்து விற்பனையில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.
இது குறித்து ஹீரோ மோட்டாகார்ப் நிறுவன செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, "உலகளவில், அதிகம் விற்பனையாகும் பைக் என்ற பெருமை, இன்னமும் ஸ்பெலண்டர் பைக்குக்கு தான் உள்ளது. கடந்த ஆண்டு, 20 லட்சம் ஸ்பெலண்டர் பைக்குகளை விற்பனை செய்து இருந்தோம். அந்த எண்ணிக்கையை, இந்த ஆண்டு தாண்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என்றார். டிஸ்கவர் பைக் விற்பனை சாதனை புரிந்தாலும், செப்டம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனையில், 15 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில், 3 லட்சத்து, 15 ஆயிரத்து, 314 வாகனங்களை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இது, 3 லட்சத்து, 71 ஆயிரத்து, 208 வாகனங்கள் விற்பனை என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)