பதிவு செய்த நாள்
17 அக்2012
00:53
சென்னை: கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்துள்ளது.திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த சில வாரங்களாக, தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது, இதன் விலை குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 2,910 ரூபாய்க்கும், சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்து, 23,280 ரூபாய்க்கும் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு, மேலும், 15 ரூபாய் குறைந்து, 2,895 ரூபாய்க்கும், சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 23,160 ரூபாய்க்கும் விற்பனையானது.ஆக, கடந்த இரு தினங்களில் மட்டும், சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.24 காரட் 10 கிராம் சுத்த தங்கம் விலை, 155 ரூபாய் குறைந்து, 30,965 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை, கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 64.20 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|