பதிவு செய்த நாள்
17 அக்2012
14:30
ஜப்பானைச் சேர்ந்த, நிஸான் கார் நிறுவனம், இந்தியாவில் மைக்ரா காரை விற்பனை செய்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். இரண்டு வகைகளிலும், தலா இரண்டு வேரியன்ட்கள், என, நான்கு வேரியன்ட்களில், இந்த கார், விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜினும்; டீசல் காரில், 1.5 லிட்டர் கே9கே இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் காரின், டாப் எண்டு வேரியன்டில், ஆன்டி பிரேக் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.,), இரண்டு ஏர் பேக்குகள் போன்ற வசதிகள் உண்டு. ஆனால், டீசல் காரின், டாப் எண்டு வேரியன்டில், ஏ.பி.எஸ்., வசதி கிடையாது. மைக்ரா காரின், விளம்பர தூதராக, பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்த, "பர்பீ' ஹிந்தி திரைப்படம், வசூலில் சக்கை போடு போடுகிறது. இதை கொண்டாடும் விதமாகவும், பண்டிகை காலத்தை ஒட்டியும், மைக்ரா காரின் ஸ்பெஷல் எடிசனை, நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ளது. "மைக்ரா பிரிமோ' என்று, இந்த காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரில், யு.எஸ்.பி., வசதியுடன் கூடிய, 2 டின் ஆடியோ சிஸ்டம், பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் வியூ கண்ணாடிகளில், எல்.இ.டி., விளக்குகள் போன்ற கூடுதல் வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் விலை, ஏற்கனவே விற்பனையில் உள்ள மைக்ரா காரை விட, ரூ.22,000 அதிகம். வெள்ளை வண்ணத்தில் மட்டுமே, இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. மைக்ரா கார், லிட்டருக்கு, 22 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|