மத்திய பட்ஜெட் மதிப்பீட்டை விட உணவு மானியம் உயர்ந்ததுமத்திய பட்ஜெட் மதிப்பீட்டை விட உணவு மானியம் உயர்ந்தது ...  "சென்செக்ஸ்' 181 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 181 புள்ளிகள் அதிகரிப்பு ...
நாட்டின் எள் உற்பத்தி 2.71 லட்சம் டன்னாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:15

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த, கரீப் பருவத்தில், நாட்டின் எள் உற்பத்தி, 27 சதவீதம் சரிவடைந்து, 2.71 லட்சம் டன்னாக குறையும் என, இந்திய எண்ணெய் வித்துக்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு (ஐ.ஓ.பி.இ.பி.சி.,) செய்துள்ளது.அதேசமயம், நாட்டின் கரீப் பருவத்தில், எள் உற்பத்தி, 2.20 லட்சம் டன் என்ற அளவிற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம்மதிப்பீட்டு பருவத்தில், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 லட்சம் ஹெக்டேரில், எள் சாகுபடி பயிரிடப்பட்டுள்ளன. இருப்பினும், செப்டம்பரில் பெய்த அடை மழையால், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், எள் பயிர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், இதன் உற்பத்தி, அதிகபட்சமாக, 87 ஆயிரம் டன் என்ற அளவில்தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மத்திய பிரதேசம் (80,030 டன்), உத்தர பிரதேசம் (76,205 டன்), குஜராத் (27,511 டன்) ஆகிய மாநிலங்கள் இடம்பெறும் என, ஐ.ஓ.பி.இ.பி.சி., அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், குஜராத் மாநிலத்தில், எள் வித்துக்கள் உற்பத்தி, 22 ஆயிரம் டன் முதல் 25 ஆயிரம் டன் வரையில்தான் இருக்குமென, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.எள் வித்துக்கள் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டை அடுத்து, சென்ற ஆண்டில், 2.50 லட்சம் டன்னாக இருந்த இதன் ஏற்றுமதி, நடப்பாண்டில், 1.50 லட்சம் டன்னாக குறையும் என, அம்ரேலியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.கரீப் பருவத்தில் ஏற்பட்ட, மோசமான பருவநிலை காரணமாக, கோடை கால எள் விதைப்பு பணிகள் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் முறையான பாசன வசதி இல்லாதது போன்றவற்றால், இம்மாநிலத்தில், எள் உற்பத்தி, 10 ஆயிரம் டன் அளவிற்கே இருக்கும் என, வர்த்தகர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டில், 40 ஆயிரம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஒருவாரத்தில், எள் வித்துக்கள் விலை, குவிண்டால் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்துள்ளது.பல நாடுகள் இந்தியாவிலிருந்து எள்ளை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஒரு குவிண்டால், எள் விலை, 11 ஆயிரம் முதல் 11,100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. என@வ, இதன் விலை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)