பதிவு செய்த நாள்
19 அக்2012
01:16

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.சீனாவின் மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி, நிபுணர்களின் மதிப்பீட்டை ஒட்டி அமைந்தது மற்றும் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், ஆரோக்ய பராமரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 181.16 புள்ளிகள் அதிகரித்து, 18,791.93 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 18,806.56 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,576.41 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், எஸ்.பீ.ஐ., டி.சி.எஸ்., உள்ளிட்ட 24 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும், விப்ரோ, சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 6 நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 58.45 புள்ளிகள் உயர்ந்து, 5,718.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,722.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,650.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|