பதிவு செய்த நாள்
19 அக்2012
01:17

கொச்சி: நாடு தழுவிய அளவில், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், தேயிலை நிறுவனங்களின், லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஓராண்டில், உரங்களின் விலை மூன்று மடங்கு அளவிற்கும், நிலக்கரி விலை, டன்னுக்கு 2,000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.இவை தவிர, தொழிலாளர்களுக்கான ஊதியமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், தேயிலை நிறுவனங்களின் லாப வரம்பு மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவு, 140 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 115 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இந்நிலையில், நாட்டின் பல பாகங்களில், தேயிலை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதுவும், தேயிலை நிறுவனங்களின் லாப வளர்ச்சியில் அதிக, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|