பதிவு செய்த நாள்
19 அக்2012
13:40

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, 170 கோடி ரூபாய்க்கு, ஜவுளி விற்பனை செய்ய, "கோ-ஆப்டெக்ஸ்' இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜவுளி விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், இவ்வாண்டு தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் மூலம், "தங்கமழை' பரிசுத் திட்டம் ஒன்று, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களில், 2,000 ரூபாய்க்கு ஜவுளி வாங்குபவர்களுக்கு, பரிசுக் "கூப்பன்' வழங்கப்படும். இதில் தேர்தெடுக்கப்படுபவருக்கு, முதல் பரிசாக, 50 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக, 25 கிராம் தங்கம், மூன்றாம் பரிசாக, 16 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும், 11 பேர் பரிசு பெற உள்ளனர். ஆறுதல் பரிசாக, 220 பேருக்கு, 3,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புடவைகள், வழங்கப்பட உள்ளன. வரும், 2013, ஜனவரி 31ம் தேதி வரை, ஜவுளி வாங்குபவர்கள், இப்பரிசுத் திட்டத்தில் பங்கேற்கலாம். கோ-ஆப்டெக்ஸ், வர்த்தப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 17 ஆயிரம் பேருக்கு, கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. பண்டிகையை ஒட்டி, இவ்வாண்டு, 170 கோடி ரூபாய்க்கு, விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு விற்பனையை விட, 104 கோடி ரூபாய் அதிகம். பண்டிகையை ஒட்டி, 226 புதிய ஜவுளி ரகங்கள், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|