பதிவு செய்த நாள்
19 அக்2012
16:47

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் "எம்- கிளாஸ்' என்ற பெயரில், எஸ்.யு.வி., காரை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின், அலபாமா மாகாணத்தில், டூஸ்காலூஸ்கா என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில், இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு, முழுமையான காராக, இந்தியாவில் இறக்குமதியாகி, விற்பனை செய்யப்படுவதால், 110 சதவீத, சுங்க வரிக்கு ஆட்படுகிறது. எனவே, இந்த காரின் விலை, ரூ.56.9 லட்சம்( எக்ஸ் ஷோரூம், டில்லி) என்ற அளவில் இருந்தது.
இந்த சூழ்நிலையில், மஹாராஷ்டிராவில், புனே அருகே, சாகன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில், "எம்-கிளாஸ்' பென்ஸ் காரின், அசெம்பள் செய்யும் பணி நடந்து வந்தது. வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய தொழிற்சாலையில் முழு காராக, உருவாக்கப்பட்டது.
அந்த வகையில், தற்போது, "எம்-கிளாஸ் எம்எல் 250 சிடிஐ' என்ற பெயரில், புதிய கார், சில நாட்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கு தேவையான உதிரிபாகங்களில், 30 சதவீதம், இந்தியாவிலேயே பெறப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே விற்பனையான, எம்-கிளாஸ் பென்ஸ் காரை விட, புதிய காரின் விலை ரூ.10 லட்சம் குறைந்துள்ளது. இந்த காரின் விலை ரூ.46.50 லட்சம்( எக்ஸ் ஷோரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில், 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. அதிகபட்சமாக, மணிக்கு, 210 கி.மீ., வேகத்தில் செல்லும். பூஜ்ஜியத்தில் இருந்து, 100 கி.மீ., வேகத்தை, 9 வினாடிகளில் தொட்டு விடும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|