33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்33 கோடி மொபைல் போன் விற்பனையாகும் ... இலவச "பாலியஸ்டர்' ரக சேலைகளுக்கு மவுசு இலவச "பாலியஸ்டர்' ரக சேலைகளுக்கு மவுசு ...
தொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2012
17:39

ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து, சென்ற செப்டம்பரிலும், ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த பிரிவில் இயங்கும், பாரதி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இந்த இழப்பைச் சென்ற மாதமும் சந்தித்துள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 50 லட்சம் வாடிக்கையாளர் வரை இழந்தனர். செப்டம்பரில் மேலும் 22 லட்சம் சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர். இதிலிருந்து இந்தியாவில், ஜி.எஸ்.எம். பிரிவில் மொபைல் தொடர்பு அதிக பட்ச உச்ச கட்டத்தினை எட்டிவிட்டது தெரியவந்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் இதுவரை வைத்திருந்து பயன்படுத்திய இரண்டாவது மற்றும் மூன்றாவது சிம் தொடர்பினைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். சென்ற ஜூன் மாதத்தில் இந்த மூன்று பெரிய நிறுவனங்களும் 31.6 லட்சம் புதிய சந்தாதாரர்களையும், ஜூலை மாதத்தில் 44.2 லட்சம் பேரையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம், தங்கள் நிறுவன சிம் போன்களைத் தொடர்ந்து 60 நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், இணைப்பைத் துண்டித்தது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மொத்தமாகக் குறைந்ததற்கு இது போன்ற நடவடிக்கைகளும் காரணமாயிருந்தது. பல நிறுவனங்கள், தாங்கள் வழங்கி வந்த சலுகைகளைக் குறைத்ததுடன், இலவசங்களையும் நீக்கிவிட்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)