"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' ஊழியர்கள் பிடிவாதம்:ஊதியம் வழங்க நாளை வரை கெடு"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' ஊழியர்கள் பிடிவாதம்:ஊதியம் வழங்க நாளை வரை கெடு ... 65 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்கள் பாதிப்புநிலக்கரி பற்றாக்குறையால் 65 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்கள் பாதிப்புநிலக்கரி பற்றாக்குறையால் ...
பல முனை தாக்குதலால் "பிளைவுட்' தொழில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2012
00:53

இந்திய "பிளைவுட்' தொழில், பல முனை தாக்குதலால் வளர்ச்சி குன்றியுள்ளது.மலை போல் குவியும் மலிவு விலை சீன பிளைவுட்கள், உள்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் மந்த நிலை, மத்திய அரசின் பாராமுகம், தொழிலாளர் பற்றாக்குறை என, பிளைவுட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீன இறக்குமதி:ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும், இந்திய பிளைவுட் சந்தை யில், அமைப்பு சாராத் துறையினரின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் விலை குறைந்த பிளைவுட்களால், உள்நாட்டில், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சீன பிளைவுட்களின் தரம் குறைவாக உள்ளதால், அவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது.
தரமான பிளைவுட்களின் இறக்குமதி அதிகமானால், உள்நாட்டு பிளைவுட் நிறுவனங்கள், குறிப்பாக, அமைப்பு சாராத நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.சீன அரசு, மரம் சார்ந்த துணை பொருட்கள் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.மூலப்பொருட்கள்ஆனால், இந்தியாவில் இதுபோன்ற நிலை இல்லை. குறிப்பாக, மூலப்பொருட்கள் வளம் (மரம்) நிறைந்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், மரம் சார்ந்த தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவில்லை என, இத்துறையினர் தெரிவித்தனர்.வட மாநிலங்களை பொறுத்தவரை, பிளைவுட் தொழிலின் ஆண்டு வருவாய் 5,000 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
"இப்பகுதியில் முன்பு, பிளைவுட் சந்தையின் ஆண்டு வளர்ச்சி, 8 - 10 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 5 சதவீதமாக குறைந்து விட்டது' என, வடமாநில பிளைவுட் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (என்.ஐ.பி.எம்.ஏ.,) தலைவர் நரேஷ் திவாரி தெரிவித்தார்.பிளைவுட் துறையின் வளர்ச்சிக்கு, ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
பொருளாதார நெருக்கடி:இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக, பன்னாட்டு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளது.இதன் எதிரொ லியாக, ரியல் எஸ்டேட் துறை சுணக்கம் கண்டுள்ளதை அடுத்து, பிளைவுட் துறையும் பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, "பேனல்' தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளன.
கோல்கட்டாவை சேர்ந்த மயூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிளைவுட்கள், "பேனல்' வகைகள் உள் ளிட்ட வற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2012ம் ஆண்டின், முதல் இரண்டு காலாண்டுகளில், 40 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.இந்த வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில் 20 - 25 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை தான் காரணம் என, மயூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆள்பற்றாக்குறை:பிளைவுட் துறையின் வளர்ச்சிக்கு, மற்றொரு தடைக்கல்லாக, ஆள்பற்றாக்குறை உள்ளது. பிளைவுட் தொழிலில், பணியாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது."இதுவும், இத் தொழிலின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது' என, ஹரியானா பிளைவுட் உற்பத்தியாளர் கூட்ட மைப்பின் தலைவர் தேவேந்தர் சாவ்லா தெரிவித்தார்.
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)