பதிவு செய்த நாள்
25 அக்2012
04:36
புதுடில்லி:உள்நாட்டில், ஏழு நாட்களுக்கு மட்டுமே, மின் உற்பத்தி மேற்கொள்வதற்கான, நிலக்கரி கையிருப்பில் உள்ளது என, மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
கோல் இந்தியா:மின் உற்பத்தி திட்டங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, பொதுத் துறையை சேர்ந்த கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களே, நிலக்கரியை அளித்து வருகின்றன.
இந்நிறுவனங்கள், போதிய அளவிற்கு, நிலக்கரியை அனுப்பாததால், நாட்டில் உள்ள என்.டி. பி.சி., நிறுவனத்தின், ஆறு "மெகா' மின் உற்பத்தி திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, ரிகாந்த் (2,500 மெ.வா.,) சிங்குர்லி (2,000 மெ.வா.,) வித்யாசல் (3,760 மெ.வா.,) ராமகுண்டம் (2,600 மெ.வா.,) சிம்ஹாத்ரி (2,000 மெ.வா.,) மற்றும் தால்சர் (3,000 மெ.வா.,) ஆகிய இடங்களில், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மேற்கண்ட அனைத்து மின் நிலையங்களிலும், ஒரு வாரத்திற்கு தேவையான அளவிற்கே, நிலக்கரி கையிருப்பு உள்ளது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்டு வரும் காலதாமதத்தால், மின் உற்பத்தி நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு குறித்து, விரைந்து முடிவு எடுக்கும் படி, மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் எழுதி இருப்பதாக, அரசு வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
நிலக்கரி இறக்குமதி:இந்நிலையில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், 6.40 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 18 சதவீதம் அதிகமாகும் என, நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், நிலக்கரி பயன்பாட்டில், இந்தியாவின் பங்க ளிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
உற்பத்தி:நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில், நிலக்கரி உற்பத்தி, 57.44 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 6.4 சதவீதம் அதிகமாகும். அதே சமயம், நிலக்கரி அளிப்பு மற்றும் தேவைக்கான இடைவெளி, 19.20 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்கு மதி, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 50 சதவீதம் அதிகரித்து, 10.28 கோடி டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|