"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' வேலை நிறுத்தம் "வாபஸ்'"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' வேலை நிறுத்தம் "வாபஸ்' ... உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம் உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம் ...
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
00:52

புதுடில்லி: உலகளவில், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த, "போர்ப்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின், நிகர சொத்து மதிப்பு, 160 கோடி டாலர் (8,800 கோடி ரூபாய்) குறைந்து, 2,100 கோடி டாலராக (1.15 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ள நிலையிலும், உலகளவில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக இவர் உள்ளார்.இவரை அடுத்து, உருக்கு துறையை சேர்ந்த லட்சுமி மிட்டல், 1,600 கோடி டாலர் (88 ஆயிரம் கோடி ரூபாய்) நிகர சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். "போர்ப்ஸ்' இதழ், இந்தியாவின், 100 பெரும் பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இவர்களை அடுத்து, தகவல் தொழில் நுட்ப துறையில் ஈடுபட்டு வரும் அசிம் பிரேம்ஜி, 1,220 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.டாட்டா குழுமத்தில், அதிக அளவு பங்கு மூலதனத்தை கொண்டுள்ள, சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பாட்ரியார்ச் பலோன்ஜி மிஸ்த்ரி (நிகர சொத்து மதிப்பு 980 கோடி டாலர்) நான்காவது இடத்திலும், சன் பார்மா குழுமத்தின் திலீப் சங்வி (நிகர சொத்து மதிப்பு 920) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 600 கோடி டாலராக உள்ளது. இவர் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 11வது இடத்தில் உள்ளார்.இந்துஜா சகோதரர்கள்: இவர்களை தவிர, முதல் பத்து பெரும் கோடீஸ்வரர் பட்டியலில், ஆதி கோத்ரெஜ் (900 கோடி டாலர்), சாவித்ரி ஜிந்தால் (820 கோடி டாலர்), எஸ்ஸார் குழுமத்தின் சசி மற்றும் ரவி ரூயா (810 கோடி டாலர்), இந்துஜா சகோதரர்கள் (800 கோடி டாலர்) மற்றும் குமார் மங்களம் பிர்லா (780 கோடி டாலர்) ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.உலகளவில், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில், கடந்த ஆண்டு, 57 பேர் இடம் பெற்றிருந்தனர். இது, இவ்வாண்டு, 61 ஆக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில், முதன் முறையாக, சன் பார்மா குழுமத்தின் திலீப் சங்வி, முதல் ஐந்து மெகா கோடீஸ்வரர்களுள் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)