பதிவு செய்த நாள்
27 அக்2012
10:44
போர்டு இந்தியா கார் நிறுவனத்தின், பிகோ கார், 2010ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில், 55 நாடுகளில், 2 லட்சம் பிகோ கார்கள் விற்பனையாகி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலத்தை ஒட்டி, மேம்படுத்தப்பட்ட பிகோ காரை போர்டு இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீஸல் என, இரண்டு வகைகளிலும் கார் கிடைக்கும். பெட்ரோல் காரின் விலை ரூ.3.84 லட்சத்திலும், டீசல் காரின் விலை ரூ.4.82 லட்சத்திலும் (எக்ஸ் ஷோரூம், டில்லி) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகோ பெட்ரோல் கார், 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் விலை ரூ.3.49 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பல கட்டமாக, விலை உயர்த்தப்பட்டு, ரூ.4.16 லட்சம் என்ற நிலையை அடைந்தது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய பிகோ காரின் விலை ரூ.3.84 லட்சம் என்ற அளவிலேயே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம், பிகோ பெட்ரோல் கார் விலை குறைக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. இதே போல, பிகோ டீசல் காரின் விலை, 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது, ரூ.5.17 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது புதிய பிகோ டீசல் காரின் விலை, ரூ.4.82 லட்சத்தில் துவங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிகோ டீசல் காரின் விலை, ரூ.35,000 அளவுக்கு குறைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|