தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ...  ஹூண்டாய் நிறுவனம் கார் விலையை உயர்த்தியது ஹூண்டாய் நிறுவனம் கார் விலையை உயர்த்தியது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாம்சங் காலக்ஸி பி 5330 சேட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2012
15:03

அண்மையில் வெளியான சாம்சங் புதிய மொபைல்களில், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் போன் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் இயங்குகிறது. 2 எம்பி திறனுடன் கூடிய கேமரா உள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. சென்ற ஜூலையில் இது அறிவிக்கப்பட்டு, இப்போது சந்தையில் கிடைக்கிறது. நான்கு அலைவரிசையில் இயங்கும் இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 118.9x59.3x11.7 மிமீ; எடை 112 கிராம். 3 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்து வசதி, ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி தரப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு வைபி மற்றும் A2DP இணைந்த புளுடூத் வசதி கிடைக்கிறது. மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் உள்ளன. டாகுமெண்ட் ரைட்டர் தரப்பட்டுள்ளது. இமேஜ்/வீடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப், காலண்டர், ஜிடாக், பிகாஸா ஆல்பம் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1200 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 14 மணி நேரம் பேசும் சக்தியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 520 மணி நேரம் தங்குகிறது. இதன் ரேடியோ அலை வீச்சு விகிதம் 0.87 W/Kg ஆக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,500.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)