1.37 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்பபு: ஜெ.,1.37 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்பபு: ஜெ., ... பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் அதிகரிப்பு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் அதிகரிப்பு ...
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2012
15:25

புதுடில்லி: 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலண்டர் விலை ரூ. 26.5 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 922 ஆக உள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலண்டர்களின் எண்ணிக்கையை 6 ஆக நிர்ணயம் செய்தது. 6 சிலிண்டர்களுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்கள் மானியமில்லா விலையிலேயே வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். மானியமில்லா சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி நிர்ணயம் செய்யப்படுகிறது. சிலண்டர்களின் இறக்குமதி விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு சிலண்டர்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலண்டர்களின் விலை ரூ. 26.5 உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டில்லியில், 895.5 ஆக இருந்த சிலண்டர், தற்போது 26.5 உயர்த்தப்பட்டு தற்போது 922 ஆக உள்ளது. இதே அளவுள்ள மானிய சிலிண்டர்களின் விலை ரூ. 410.42 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இதே போல், வர்த்தகப்பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1105.5ம், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1551 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த சிலிண்டர்கள் முறையே, ரூ. 1075 மற்றும் 1536.5 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)