கட்டமைப்பு துறையில் 1லட்சம் கோடி டாலர் முதலீடுகட்டமைப்பு துறையில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு ... படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம் படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம் ...
நாட்டின் வாகன விற்பனையில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
03:40

புதுடில்லி: பண்டிகை காலத்தையொட்டி, சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அண்மையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து, 4.50 சதவீதத்திலிருந்து, 4.25 சதவீதமாக நிர்ணயித்தது.
இதையடுத்து, வங்கிகளுக்கு கூடுதலாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், அவற்றின் வாகன கடன்களும் அதிகரிக்கும். எனவே, வரும் மாதங்களில், வாகன விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, சென்ற அக்டோபர் மாதத்தில், 1,03,108 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (55,595 கார்கள்) விட, 85.46 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில் கார்கள் விற்பனை, 86.56 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51,458 என்ற எண்ணிக்கையிலிருந்து, 96,002 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த பயணிகள் கார் விற்பனை 93.75 சதவீதம் அதிகரித்து, 41,192 லிருந்து, 79,811 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி 71.77 சதவீதம் உயர்ந்து, 4,137 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7,106 ஆக அதிகரித்து உள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை, 28.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 53,438 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 41,506 ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 39,352 லிருந்து, 51,316 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 2,154 லிருந்து, 2,122 ஆக சற்று குறைந்துள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்ற அக்டோபர் மாதத்தில், 58,785 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (48,322 கார்கள்) விட, 21 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33,001 என்ற எண்ணிக்கையிலிருந்து, 35,778 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 50 சதவீதம் உயர்ந்து, 15,321 லிருந்து, 23,007 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபரில், போர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 10,948 ஆக சற்றே அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 10,906 ஆக இருந்தது.இருப்பினும், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 6.35 சதவீதம் சரிவடைந்து, 8,091 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7,577 ஆக குறைந்துள்ளது.

அதேசமயம், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 19.75 சதவீதம் அதிகரித்து, 2,815லிருந்து, 3,371 ஆக உயர்ந்துள்ளது. சென்ற, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஆறு மாத காலத்தில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 88 சதவீதம் அதிகரித்து, 23,642 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 12,570 ஆக இருந்தது. சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், இந்நிறுவனம், உள்நாட்டில், 1,862 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற, அக்டோபர் மாதத்தில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,90,438 ஆக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,83,718 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 4 சதவீதம் உயர்ந்து, 1.80 லட்சத்திலிருந்து, 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 1,59,887 லிருந்து, 1,70,273 ஆக உயர்ந்துள்ளது.இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 22,129 லிருந்து, 18,563 ஆக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,712லிருந்து, 4,062 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)