பதிவு செய்த நாள்
02 நவ2012
15:32

நாமக்கல்: தமிழக முட்டை லாரிகள், கேரள மாநிலத்தில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து, மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. அதனால், அம்மாநில எல்லையில், மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நிலவும் பறவைக் காய்ச்சல் பீதியால், தமிழக முட்டை லாரிகள், கேரள மாநிலத்தினுள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது. அக்டோபர், 29ம் தேதி நள்ளிரவு முதல், இத்தடை நீடித்து வருகிறது. அதன்காரணமாக, தமிழக முட்டை லாரி, கறிக்கோழி, முட்டைக் கோழிகள் ஏற்றிச் சென்ற லாரிகள், கேரள மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, மூன்றாவது நாளாக இத்தடை நீடிப்பதால், கேரள மாநில எல்லையில் மட்டும், மூன்று கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதுபோல், கறிக்கோழி, முட்டைக் கோழியும் அம்மாநிலத்திற்குள் கொண்டு செல்ல முடியாமல், கேரள மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள, இரண்டு லட்சம் கோழிகளும் தீவனமின்றி செத்து மடியும் சூழலும் உருவாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|