பதிவு செய்த நாள்
03 நவ2012
11:55
இந்தியாவில், யுடிலிட்டி வெஹிக்கல் (யு.வி.,) பிரிவு கார்கள் விற்பனையில், மஹிந்திரா தான் முன்னணியில் உள்ளது. இருப்பினும், அதிகம் விலை கொண்ட, பிரிமியம் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிக்கல் (எஸ்.யு.வி.,) பிரிவில், தனி கவனம் செலுத்த திட்டமிட்டது. இதற்காக, தென் கொரியாவை சேர்ந்த ஸாங்யாங் மோட்டார் கம்பெனி நிறுவனத்துடன், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம், மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. தென் கொரிய நிறுவனத்தின், 70 சதவீத பங்குகளை, ரூ.2,105 கோடி கொடுத்து, மஹிந்திரா நிறுவனம் வாங்கியது. தென் கொரிய நிறுவனம், பிரிமியம் எஸ்.யு.வி., கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஸாங்யாங் கார் நிறுவனத்தின், பிரபலமான " ரெக்ஸ்டான்' எஸ்.யு.வி., காரின் உதிரி பாகங்கள், இறக்குமதி செய்யப்பட்டு, மஹாராஷ்டிராவில், புனே அருகே சாகன் என்ற இடத்தில் உள்ள, தொழிற்சாலையில், அசெம்பிள் செய்யப்பட்டது. தற்போது, அட்டகாசமான தோற்றத்துடன், "ரெக்ஸ்டான்' கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார், ஆர்எக்ஸ்5, ஆர்எக்ஸ்7 என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். இதில், ரெக்ஸ்டான் ஆர்எக்ஸ்5 வேரியன்ட் காரின் விலை, ரூ.17.67 லட்சம்( எக்ஸ்÷ஷாரூம், மும்பை). இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. ரெக்ஸ்டான் ஆர்எக்ஸ்7 வேரியன்ட் காரின் விலை ரூ.19.67 லட்சம். இந்த காரில், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இரண்டு வேரியன்ட் கார்களும், 4 வீல் டிரைவ் வசதி கொண்டது. இதில், ஆர்எக்ஸ்7 வேரியன்ட் கார், அதிகபட்சமாக, மணிக்கு 194 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. ஆர்எக்ஸ்5 வேரியன்ட் காரில், 2.7 லிட்டர் ஆர்எக்ஸ்270 எக்ஸ்டிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது; இந்த கார், ஒரு லிட்டருக்கு, 12.4 கி.மீ., மைலேஜ் தரும் என்றும், ஆர்எக்ஸ்7 வேரியன்ட் காரில், 2.7 லிட்டர் ஆர்எக்ஸ்270 எக்ஸ்விடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், லிட்டருக்கு, 11.18 கி.மீ., மைலேஜ் தரும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|