தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைவு ... புதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோ புதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா சபாரி ஸ்ட்ரோம் எஸ்.யு.வி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2012
14:57

பண்டிகை காலத்தை ஒட்டி, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிக்கல் (எஸ்.யு.வி.,) பிரிவில், டாடா சபாரி ஸ்ட்ரோம் என்ற புதிய காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள, டாடா சபாரி காரின் மேம்படுத்தப்பட்ட காராகவே, சபாரி ஸ்ட்ரோம் கருதப்படுகிறது. இது, லேண்டு ரோவர் கார் வடிவமைப்பில் காணப்படுகிறது. இந்த கார், ஐந்து வேரியன்ட்களில் வெளி வந்துள்ளது. இதன் விலை, ரூ.9.95 லட்சத்தில் துவங்கி, ரூ.13.66 லட்சம் வரை(எக்ஸ்÷ஷாரூம்) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதன் விலை மாறுபடும். இந்த காரில், 2.2 லிட்டர் டைகோர் டீŒல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு வசதிகளிலும் இந்த கார் கிடைக்கும். 2 வீல் டிரைவ் வசதி கொண்ட கார், லிட்டருக்கு, 14 கி.மீ., மைலேஜும், 4 வீல் டிரைவ் வசதி கொண்ட கார், லிட்டருக்கு,13.2 கி.மீ., மைலேஜும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில், ஏ.பி.எஸ்., இ.பி.டி., மற்றும் இரண்டு ஏர் பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. ஹுண்டாய் வெர்னா கார் போல, டாடா சபாரி ஸ்ட்ரோம் காருக்கும், ரிவர்ஸ் கேமரா வசதி உண்டு. இந்த காருக்கு, 3 ஆண்டுகள்/ 1,00,00 கி.மீ., வாரன்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு ஆண்டு/ 50,000 கி.மீ., வரை கூடுதலாக நீட்டிக் கப்படவும் வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)