தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைவு ... இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு ...
புதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2012
16:15

அமெரிக்க ஃபோர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபோர்ட் ஃபிகோ ஹேட்ச்பேக் கார் இந்திய வாகன சந்தையில் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு கார் பிரியர்களின் மனம் கவர்ந்த காராக விற்பனையானது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது இந்த மாடல் மேலும் பல புதிய அம்சங்களுடனும், மெருகூட்டப்பட்ட தோற்றத்துடனும், நவீன வசதிகளுடனும் புதுப்பொலிவுடன் மறு அவதாரம் எடுத்துள்ளது. ஃபிகோவில் 100 மாற்றங்களும், 10 புதுத்தோற்றம் தரும் அம்சங்களையும் புகுத்தியுள்ளது ஃபோர்ட். ஆனால் இதன் விலையில் எந்த அதிகரிப்பும் இன்றி பழைய விலையிலேயே கிடைக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சிறிய காரில் நாம் எதிர்பார்க்கக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஃபிகோவில் மிகவும் நவீன அம்சங்களான ரேபிட் டீசசெலரேஷன் வார்னிங், ஸ்பீட் சென்சிங் வால்யூம் கண்ட்ரோல், லேன் சேன்ஜ் இன்டிகேட்டர், ஸ்மார்ட் ப்ரோக்ராமின் ரிமோட் கீ, 6 ஸ்பீட் வைப்பர், சென்ட்ரல் லாக்கிங் இருக்கும் எரிபொருள் எவ்வளவு தூரம் கொடுக்கும் என்பதை குறிக்கும் கருவி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி
போன்றவைகளை இதில் காணமுடிகிறது.ஃபோர்ட் ஃபிகோ பெட்ரோல், SOHC டீசல் என்று இரண்டிலும் கிடைக்கிறது.
ஒவ்வொன்றிலும் நான்கு மாடல்கள் இருக்கின்றன. ஃபிகோவின் பெட்‌ரோல் மாடல்களில் 1.2லி, 1196சிசி SEFI பெட்ரோல் என்ஜின் 71bh பவரையும், 102 NM டார்க்கையும் கொடுக்கிறது. இதன் டீசல் மாடலில் 1.4லி, 1399சிசி, ட்யூராடார்க் SOHC டீசல் என்ஜின் 69bh பவரையும், 160NM டார்க்கையும் வழங்குகிறது என்பதுடன் இதே என்ஜின் தான் ஃபோர்ட் ஐகான் மற்றும் ஃபியஸ்டாவில் சிறந்த ‌‌செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டு வேரியண்ட்டிலும் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் சிஸ்டம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. என்ஜினின் செயல்திறனில் சில மாற்றங்கள் ‌செய்யப்பட்டுள்ளதால் வண்டியின் "பிக் அப்' அதிகரித்துள்ளது. 0-100 கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகத்தை 15.5 வினாடியில் அடைகிறது. மேலும் இதன் பெட்ரோல் வேரியன்ட் அதிகபட்சமாக 170கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகம் வரை செல்கிறது மற்றும் டீசல் என்ஜின் 16 வினாடியில் 0-100 கிலோமீட்டரை அடைவதுடன் அதிகபட்சமாக 175கிலோ மீட்டர் மணிக்கு என்ற வேகம் வரை செல்கிறது.
ஃபிகோவின் வெளித்தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மனித கண்கள் போன்ற வடிவத்தில் உள்ள ஹெட்லைட் ஹேலோஜன் லாம்புடனும் தெளிவாக தெரியும் டர்ன் இன்டிகேட்டருடனும் உள்ளது. முன்புறம் இரண்டு பக்கங்களிலும் ஃபாக் லாம்ப்பிற்கான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு கண்ணாடியும், கதவின் கைப்பிடிகளும் காரின் நிறத்திலே‌யே இருப்பதும் இதன் தோற்றத்திற்கு அழகு சேர்க்கிறது. முன்புறம் வின்ட் ஹீல்ட்டில் "ஆண்டி டிரிப் வைப்பிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. டெயில் லைட்கள் நீளவாக்கில் அமைக்கப்பட்டுள்ளதும் பின்புற கூரையின் முடிவில் எல்இடி ப்ரேக் லைட் பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிட வேண்டியவையாகும். இதன் க்ரவுன்ட் கிளியரன்ஸ் 168மிமி என்பதும் இதன் வீல்பேஸ் 2489மிமி என்பதும் சாலையில் இதன் ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்திய சிறிய கார் செக்மன்ட்களில் இல்லாத சொகுசு அம்சங்கள் பல ஃபிகோவின் உள்ளமைப்பில் காணப்படுகிறது. நல்ல அகலமான சீட்கள், கச்சிதமான அழகுடன் சீட் நுணியும், அமைப்பும், சொகுசான அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, வட்டவடிவ ஏசி வெண்ட், அட்வான்ஸ்டு ஆடியோ சிஸ்டம், எம்பி3 ப்ளேயர், ரேடியோ மற்றும் 4 ஸ்பீக்கர்களுடன், அழகான டிஜிட்டல் ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப்
மீட்டர், 4 மொபைல் போனை இணைக்கக் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஏசி மற்றும்
மற்றும் ஹீட்டிங் சிஸ்டம், எலக்ட்ரானிக்கலி அட்ஜஸ்டபிள் அவுட்சைட் மிர்ரர் மற்றும் 284லிட்டர் கொள்ளளவு கொண்ட அகலமான இடம் (பூட் ஸ்பேஸ்) என்று வாங்குவோர் பெருமைப்படக் கூடிய பல அம்சங்கள் இதில் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ் மற்றும் இபிடி கொண்ட ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புற இரண்டு ஏர்பேக், கீ லெஸ் என்ட்ரி என்ற நவீன அம்சமான சாவியில்லாமலே வண்டியை ஸ்டார்ட் செய்யக்கூடிய வசதி கொண்ட "ஸ்மார்ட் ப்ரோக்ராமபிள் ரிமோட் கீ' பவர் விண்டோ (முன்புறம்), டே - நைட் ரியர் வ்யூ மிர்ரர், சென்ட்ரல் லாக்கிங், என்ஜின் இம்மொபலைசர், சீட் பெல்ட் சரியாக போடபடவில்லை என்பதையும், கதவு சரியாக மூடப்படவில்லை என்பதையும் சொல்லக்கூடிய எச்சரிக்கை சமிக்ஞை போன்றவைகள் ஃபிகோவில் அமைக்கப்பட்டுள்ளது.ஃபோர்ட் நிறுவனத்தின் பெயர் பெற்ற உயர் என்ஜின் செயல்திறன் ஃபிகோவில் காணப்படுவதுடன், பெரிய கார்களில் மட்டும் காணப்படும் பல நவீன அம்சங்கள், ஸ்டைலான புதுமையான வெளிப்புறத்தோற்றம் என்று மீண்டும் இந்திய சாலைகளில் புதுப்பொலிவுடன் கலக்க வந்திருக்கிறது ஃபிகோ.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)