புதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோபுதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோ ... இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாகசம் விரும்புவோரின் தேடல் சூப்பர் கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2012
17:53

அதிகபட்ச செயல்திறன் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் பொதுவான தயாரிப்புகளில் இருந்து விலகி வித்தியாசமான தனித்தன்மையை விரும்பும் கார் பிரியர்களுக்காக, தயாரிக்கப்படுவதே சூப்பர் கார்கள். ஹை-என்ட் ஸ்போர்ஸ் கார்களை விட, இவை எந்தவிதங்களில் சூப்பர் என்று கேட்கிறீர்களா? இவை, பிரத்தியேகமாக தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்ப கார் உற்பத்தி தொழிற்சாலையிலேயே சிறப்பான பொறியியல் தொழில்நுட்பங்களை முடிந்த வரை மனித கைகளால் செய்யப் படுவதாகும். ஒவ்வொரு கட்டத்திலும், பார்த்து பார்த்து செய்யப்படும் இக்கார்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவும் விலையோ மில்லியன் டாலர்களை தாண்டியும் நிர்ணயிக்கப்படுகிறது. சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனங்களான லாம்பார்கினி, மெஸ்சரட்டி மற்றும் பெர்ராரியின் தயாரிப்புகள் இவ்வகையை சார்ந்தவை.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம், பார்ப்போரை அதிசயிக்கத்தூண்டும் வித்தியாசமான தோற்றம், அதீத என்ஜின் செயல்திறன், பவர் மற்றும் கையாள வெகுலாவகமானதாகவும் இவை இருக்கும். இக்கார்கள் பெரும்பாலும், ரியர்-வீல் டிரைவ் கொண்டதாகவும், இன்ஜின் பின்புறத்தில் அமைக்கப்பட்டும் இருக்கும். பின்புறம் இன்ஜின் எடை இருப்பதால், காரின் எடை பரவலாக இருக்கும். இதனால், அதி துல்லிய ட்ராக்ஷன் கிடைக்கும். சூப்பர் கார்களின் தனிப்பட்ட திறன் என்னவென்றால், அதிகமான வேகம் செல்லக் கூடியதும், அந்த வேகத்திலும் முழுமையான ஓட்டுனர் கட்டுப்பாட்டில் அதன் செயல்பாடு இருப்பதுமே ஆகும்.
இதனுடைய சேசிஸ் எடைக்குறைவாக இருப்பதும், இதன் அதிக வேகத்திற்கும், சுலபமாய் கட்டுப்படுத்த முடிவதற்கும் காரணமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு, பெராரி என்ஜோ (Ferral Enjo) மாடல் கால் மைல் தூரத்தை வெறும் 11 வினாடிகளில் கடந்து விடும்; மணிக்கு, 133 மைல் என்ற வேகத்தில், அவ்வளவு ஆற்றல் கொண்டது, இந்த மாடல்கார். பொதுவாக, சூப்பர் கார்களில் மைலேஜையோ, அதிக அளவு பாதுகாப்பையோ வேண்டுபவர் இல்லை. அதிகப்படியான வேகத்தையும், கன்ட்ரோலையும் மட்டுமே பிரதானமாய் விரும்பும் சாகசப்பிரியர்களின் விருப்பமாகவே இக்கார்கள் உருவாக்கப்படுகின்றன. அ­­­சாதாரண தோற்றமும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும். பின்புறமோ, மேற்கூரையோ திறந்து மூடும்படியான கதவுகள், ஹை-என்ட் எலக்ட்ரானிக் அம்சங்களும், இவற்றின் சிறப்பம்சங்களாகும்.
டிசைனர் கார்களாக இவை உருவாக்கப்படுவதாலேயே, இவற்றின் விலை மிக அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இவ்வகை கார்களின் சொந்தக்காரர்களாய் இருக்கின்றனர். ஆக்சலரேஷன் சிறப்பாய் கையாளக்கூடிய அம்சங்கள் மற்றும் காரின் எடை வேக விகிதங்களைக் கொண்டு, பார்க்கையில் செவர்லேயின் கார்வெட்டே, Z06 மாடல் சூப்பர் காராக கருதப்படுவதும், பெராரியின் FXX மாடல் இரண்டும் மில்லியன் டாலர் விலை உள்ளதும், சூப்பர் கார்களில் குறிப்பிடப்பட வேண்டியவைகளாகும். விலை அதிகம் என்பதாலே, இவற்றின் இன்சூரன்ஸ் தொகையும் மிக அதிகமாகவே இருக்கும்.வாழ்க்கையின் அதிசயங்களையும், அற்புதங்களையும் சாகசங்களையும் துய்க்க நினைப்பவர்களின் தேடல் சூப்பர் கார்கள்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)