இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவுஇரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு ... பார்தி ஏர்டெல் - "ஐபோன்-5'குறைந்த கட்டணத்தில் சேவை பார்தி ஏர்டெல் - "ஐபோன்-5'குறைந்த கட்டணத்தில் சேவை ...
"டீ.டி.எச்.,' நிறுவனங்களின் விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2012
06:17

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சென்னை நீங்கலாக, நாட்டின் முக்கிய மூன்று நகரங்களில், கேபிள் "டிவி' ஒளிபரப்பு, டிஜிட்டலுக்கு மாறியுள்ளது. இதை அடுத்து, வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் "டீ.டி.எச்., நிறுவனங்களின் காட்டில் அடை மழை பெய்து வருகிறது.
இந்நிறுவனங்களின், செயற்கைக்கோள் வாயிலான தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கு, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.இதனால், இத்தகைய சேவையை வழங்கும் பல நிறுவனங்களின் "செட்டாப் பாக்ஸ்' விற்பனை, உச்சத்தில் உள்ளது. இதே போன்று, பன்முக தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள் (எம்.எஸ்.ஓ.,), மேற்கொண்டு வரும், "செட்டாப் பாக்ஸ்' விற்பனையும் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில், "டீ.டி.எச்.,' நிறுவனங்களின் "செட்டாப் பாக்ஸ்' விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து, "டாட்டா ஸ்கை' நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""சென்னை, டில்லி, மும்பை மற்றும் கோல்கட்டா நகரங்களில், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 15 சதவீதம் அதிகரிப்பது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் இது, 40 சதவீதம் உயர்ந்துள்ளது,'' என்று தெரிவித்தார்.இந்தியாவில், "டீ.டி.எச்.,' சந்தையில், "டிஷ் டிவி' நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக, டில்லியில் இதன் செட்டாப் பாக்ஸ் விற்பனை வழக்கத்தை விட, 10 மடங்கு உயர்ந்துள்ளது.

"மும்பையில் "செட்டாப் பாக்ஸ்' விற்பனை, வழக்கத்தை விட, 7-8 மடங்கு அதிகரித்துள்ளது' என, "டிஷ் டிவி' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் கபூர் கூறினார்.குறிப்பிட்ட நான்கு நகரங்களில், "டாட்டா ஸ்கை' நிறுவனத்தின் "டீ.டி.எச்' சேவை கேட்டு, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், ஏற்பட்டுள்ள பணி நெருக்கடியை சமாளிக்க, இந்நிறுவனம், இதர நகரங்களில் உள்ள அதன் ஏராளமான பணியாளர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது.இதே போன்று, எம்.எஸ்.ஓ., நிறுவனங்களுக்கும், உள்ளுர் கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் வாயிலாக, "செட்டாப் பாக்ஸ்' வேண்டி ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.சென்னை உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களில் கேபிள் "டிவி' சேவையை "அனலாக்' முறையில் இருந்து "டிஜிட்டல்' தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதற்கான கெடு, சென்ற அக்., 31ம் ÷திதியுடன் முடிவடைந்தது. எனினும், சென்னையில் வரும், 5ம் தேதி வரை இந்த கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)