பதிவு செய்த நாள்
04 நவ2012
06:21
சென்னை:சென்னையில், யுனிவர்செல் நிறுவனத்தில், "ஆப்பிள் ஐபோன் 5' என்ற புதிய, மொபைல் போனை, நடிகர் ஜீவா அறிமுகம் செய்து வைத்தார்.இந்தியாவில், ஐபோன் 5ஐ யுனிவர்செல் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய தொழில்நுட்பங்கள் அடங்கிய, இந்த போன், 4 அங்குல "டச்' டிஸ்பிளேயும், ஐ.ஓ.எஸ் 6ல் செயல்படுவதுடன், ஏ6 சிப்பும், 7.6 மி.மீ., அளவில் மெல்லியதாகவும், 112 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது.புதிய, 8 எம்.பி., கேமராவில் உள்ள படங்களை, 1,136க்கு, 640 பிக்கெல்களாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த போன் அனைத்து யுனிவர்செல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். யுனிவர்செல் நிறுவனர் சதீஷ்பாபு பேசுகையில், ""சென்னையில் ஆப்பிள் போனை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர் சேவைகளை அளிப்பதில், எங்களது நிபுணத்துவம், மற்ற நிறுவனங்களை விட முன்னிலையில் உள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|