தங்கம் விலையில் தொடர் ஏற்றம்தங்கம் விலையில் தொடர் ஏற்றம் ... வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி ...
தங்கம் இறக்குமதியில் இந்தியாவை விஞ்சும் சீனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2012
04:12

லண்டன்: நடப்பாண்டு, சர்வதேச அளவில், தங்க இறக்குமதியில், சீனா, இந்தியாவை விஞ்சும் என, சர்வதேச ஆய்வு நிறுவனமான ஜி.எப்.எம்.எஸ்., தெரிவித்துள்ளது.கடந்த பல ஆண்டுகளாக, தங்க பயன்பாட்டில், உலகளவில் இந்தியாவே முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு சில ஆண்டுகளாக, தங்கப் பயன்பாடு மற்றும் ஆபரணங்கள் சந்தையில், சீனா முன்னிலையில் உள்ளது.நடப்பாண்டில், சீனாவின் தங்க இறக்குமதி, 860 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த ஆண்டு, 960 டன்னாக இருந்தது. இது, நடப்பாண்டில், 600 டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சீனாவின், மொத்த தங்க இறக்குமதியில், ஆபரணங்களுக்கான தேவை, 520 டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 515 டன்னாக இருந்தது.மேலும், முதலீட்டு நோக்கத்திற்காக வாங்கப்படும் தங்கம், 265 டன்னிலிருந்து, 270 டன்னாக உயரும் என்றும், எஞ்சியுள்ள 70 டன், தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், தங்க உற்பத்தியில் சீனாவே முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், அந்நாட்டின் தங்க உற்பத்தி, 371 டன்னாக இருந்தது. இந்நிலையிலும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, சீன நாடு அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு: சென்னை: கடந்த ஒரு சில தினங்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை, 38 ரூபாய் அதிகரித்து, 2,979 ஆக உயர்ந்தது. ஆக, ஒரு சவரன் தங்கத்தின் விலை, ஒரே நாளில், 304 ரூபாய் உயர்ந்து, 23,832 ஆக அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டில், வட மாநிலங்களில், வரும் ஞாயிற்றுகிழமை, "தந்தராஸ்' பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், தங்க ஆபரணங்கள் வாங்குவது கூடியுள்ளது. இதன் காரணமாகவே, தங்கத்தின் விலை, உயர்ந்துஉள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.நேற்றைய வர்த்தகத்தில், 10 கிராம், 24 காரட் தங்கத்தின் விலை, 405 ரூபாய் அதிகரித்து, 31,860 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை, 1,125 ரூபாய் அதிகரித்து, 61,025 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)