பதிவு செய்த நாள்
10 நவ2012
14:57
ஜப்பானை சேர்ந்த, மிட்சுபிஷி கார் நிறுவனம், இந்தியாவில், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டணி, 2002ம் ஆண்டில், இந்தியாவில், "பஜூரோ' என்ற, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை அறிமுகப்படுத்தியது. நடப்பு, 2012ம் ஆண்டில், "பஜூரோ ஸ்போர்ட்' என்ற பெயரில், மேம்படுத்தப்பட்ட, எஸ்.யு.வி., கார் அறிமுகமானது. இந்த கார், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. லிட்டருக்கு, 11 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 லிட்டர், கொள்ளளவு கொண்ட, எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டது. இந்த காரில், 2.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அறிமுகமான புதிதில், பஜூரோ ஸ்போர்ட் காரின் விலை ரூ.24.43 லட்சம்( எக்ஸ்÷ஷாரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டது. அதிக விலை கொண்ட, பிரிமியம் எஸ்.யு.வி.,
கார்கள் சந்தையில், இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டதால், 110 சதவீத சுங்க வரிக்கு ஆட்பட்டு, விலை அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், இதன் உதிரிபாகங்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலையில், பஜூரோ ஸ்போர்ட் கார் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த காருக்கான, டயர், கண்ணாடி, சீட் பெல்ட், முகப்பு விளக்குகள், வைப்பர், அலாய் வீல்கள் உட்பட, 14 சதவீத உதிரி பாகங்கள், இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. எனவே, இந்த காரின் விலையில், ரூ.1.87 லட்சம் குறைந்து, ரூ.22.56 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|